பழனியில் எஸ். எஸ்ஐயை வெட்டிய விவகாரம், ஒருவர் கைது

பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றிவரும் சந்தான கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் ஆனந்தன் என்பவரையும் அரிவாளால் வெட்டி தாக்கிவிட்டு தப்பி ஓடிய யுவராஜை காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர் தலைமறைவாக உள்ள பொன்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

அஞ்சல் நிலைய கணக்குடன் பான் இணைப்பு அவசியம்

அஞ்சல் நிலைய பரிவர்த் தனையில் செய்யப்படும் முறைகேடுகளைஅஞ்சல் நிலைய பரிவர்த் தனையில் செய்யப்படும் முறைகேடுகளை தடுக்க வாடிக்கையாளர்கள் புதிதாக கணக்கு தொடங்கும் போது  செல்போன் எண்ணை இணைப்பது  அவசியம் என அஞ்சல் துறை வலியுறுத்தியுள்ளது. கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் வாடிக்கையாளரின் பான்கார்டு எண்ணை சமர்பிக்க வேண்டும். இல்லையெனில் குறிப்பிட்ட கணக்கில் செயல்பாடுகள் பான்கார்டு எண் சமர்பிக்கும் வரை நிறுத்தி வைக்கப்படும். ரூ.20 ஆயிரம் மற்றும் அதற்கு மேலான பணப்பரிவர்த்தனைகளுக்கு செல் போன் எண்ணையும், …

திண்டுக்கல் பள்ளிகளின் தேவை குறித்து பட்ஜெட்: ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில்

ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 2022-23 ம் கல்வியாண்டின் தேவைகளுக்கான பட்ஜெட் கணக்கிடும் பணி மும்முரமாக நடக்கிறது.மத்திய அரசின் எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்கள் ஒன்று முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வியை உறுதி செய்ய துவங்கப்பட்டது. தற்போது இவ்விரு திட்டங்களும் இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த கல்வி திட்டமாக செயல்பட்டு வருகிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 2022-23 ம் கல்வியாண்டின் தேவைகளுக்கான பட்ஜெட் கணக்கிடும் பணியில் திட்ட அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.பள்ளி வகுப்பறை கட்டடம், …

திண்டுக்கல் ஒரு தினுசுதான்.. வ.உ.சி., வேலுநாச்சியார் வேடத்துடன் வந்தால் 2 சிக்கன் பிரியாணி இலவசம்

திண்டுக்கல்லில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வ.உ.சி., வேலுநாச்சியார் வேடமணிந்து வரும் குழந்தைகளுக்கு 2 சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என்று ஹோட்டல் முஜிப் பிரியாணி அறிவித்திருப்பது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இத்தனைக்கும் வீரத்தாய் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி. பாரதியார் என தேச விடுதலைக்காகப் போராடி மாண்ட மான மறவர்களின் திருவுருவங்களே அதில் இடம்பெற்றிருந்தன. ஆனால் வ.உ.சியை தெரியாது, வேலுநாச்சியாரை தெரியாது என கூறி திமிராக தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது தமிழகத்தில் கொந்தளிப்பை …

பழனி முருகன் கோவிலில் தைப்பூச விழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 16-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனால் மதுரை அலங்காநல்லூரில் ஜனவரி 16-ந் தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஜனவரி 17-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் ஜனவரி 18-ந் தேதியன்று தைப்பூசம் என்பதால் முருகன் கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் என்ன செய்வார்கள் என்கிற குழப்பம் இருந்தது. இந்த …

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பாம்புடன் வந்த வாலிபர்

திண்டுக்கல் மாவட்டம் வயலூரில் வடமாநிலத் தைச் சேர்ந்த அவினேஷ் (வயது 19) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இன்று அவர் வேலை பார்த்து கொண்டிருந்தபோது விஷ பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது. இதனையடுத்து தன்னை கடித்த பாம்புடன் அவினேஷ் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தார். இதை பார்த்ததும் அங்கிருந்த ஊழியர்கள் அச்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.